சென்னை: தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலைத்திருந்த விலையில் இன்று திடீரென உயர்வு பதிவாகியுள்ளது.
முன்னதாக, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,150க்கும், ஒரு சவரன் ரூ.81,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (செப்டம்பர் 12) 22 காரட் தங்க விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,240 ஆகவும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.81,920 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.8,475 ஆகவும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.67,800 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலைவும் சற்றே உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.142, ஒரு கிலோ வெள்ளி ரூ.1,42,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த உயர்வால் பொதுமக்கள் தங்க நகை வாங்க முடியாத நிலை அதிகரித்துள்ளதுடன், முதலீட்டாளர்கள் “பாதுகாப்பான சேமிப்பு” வழியாக தங்கத்தை அதிகம் தேடுவார்கள் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.