2025 ஆகஸ்ட் மாதம் துவங்கியதிலிருந்து தங்கத்தின் விலை பெரிதும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. முதல் நாளிலேயே தங்க விலை திடீரென குறைந்தது. ஆனால் அதன் பின்னர் விலை மீண்டும் உயரத் தொடங்கியது.
ஆகஸ்ட் 5 அன்று, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராமிற்கு ரூ.9,370 ஆகவும், ஒரு சவரன் ரூ.74,960 ஆகவும் இருந்தது.

இன்று ஆகஸ்ட் 6-ஆம் தேதி, விலை மேலும் உயர்ந்தது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ரூ.9,380 ஆகவும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.75,040 ஆகவும் உள்ளது.
இத்துடன், 18 காரட் தங்கத்தின் விலைவும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ரூ.7,750 ஆகவும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ரூ.62,000 ஆகவும் விற்பனை நடைபெற்று வருகிறது.
வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.126 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,26,000 ஆகவும் உள்ளது.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். விலை நிலவரம் இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இந்த விலை நிலவரம் நகை வாங்க நினைப்பவர்களுக்கு சற்று சிந்திக்கத்தக்க சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை பங்குச் சந்தை மற்றும் சர்வதேச சந்தை தாக்கத்தின் கீழ் விற்பனைக்கு வருகின்றன.
பங்குச் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், ரூபாயின் மதிப்பில் ஏற்படும் வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டாலர் விலை ஆகியவை இந்த விலை ஏற்ற இறக்கங்களில் முக்கிய காரணமாக உள்ளன.