ஆகஸ்ட் 8ஆம் தேதி தங்கம் சவரனுக்கு ரூ.75,760 என வரலாறு காணாத உயரத்தை எட்டியது. அதன் பின்னர் தொடர்ந்து உயர்வைத் தக்க வைத்திருந்த நிலையில், இந்த வாரம் தொடங்கியதிலிருந்து தங்க விலை சற்றே தளர்வை சந்தித்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 16) சென்னை சந்தையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.74,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,275 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஜூலை 23ஆம் தேதிக்குப் பின் தங்க விலை ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தது. ஆகஸ்ட் 6ஆம் தேதி சவரனுக்கு ரூ.75,000 தாண்டியது. அதன்பின் ஆகஸ்ட் 8ஆம் தேதி உச்சமாக ரூ.75,760 ஆக உயர்ந்தது. ஆனால் இந்த வாரம் தொடக்கத்தில் தங்கம் வீழ்ச்சி கண்டது. திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.75,000 ஆகவும், செவ்வாய்க்கிழமை ரூ.640 குறைந்து ரூ.74,360 ஆகவும், புதன்கிழமை ரூ.40 குறைந்து ரூ.74,320 ஆகவும் விற்பனையானது. வியாழக்கிழமை எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையிலேயே இருந்தது. நேற்று மீண்டும் ரூ.80 குறைந்து ரூ.74,240 ஆக விலை சரிந்தது.
இதற்கிடையில், வெள்ளி விலை கடந்த மூன்று நாட்களாக எந்த மாற்றமும் இன்றி நிலைத்திருக்கிறது. வரலாறு காணாத உயரத்தை தொட்ட தங்கம், தற்போது குறைவடைந்துள்ளதால் நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் கூடுதல் ஆர்வத்துடன் தங்கம் வாங்கும் நிலை காணப்படுகிறது.
ஆனால் நிபுணர்கள் எச்சரிக்கையில் கூறியதாவது, சந்தை எப்போதும் மாறுபடும் தன்மையுடையது. தங்க விலை நிலை சர்வதேச சூழ்நிலைகள், பொருளாதார நிலவரம், அமெரிக்க டாலர் மதிப்பு, உலகளாவிய தேவை போன்றவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். எனவே தற்போது விலை குறைந்தாலும், எதிர்காலத்தில் எவ்வாறு அமையும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.