சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 3) விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்குவோருக்கு ‘ஜாக்பாட்’ வாய்ப்பு என வணிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று காலை (அக்டோபர் 2) ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.10,880க்கும், ஒரு சவரன் ரூ.87,040க்கும் விற்பனையாகியது. மாலை நிலவரப்படி விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,950க்கும், ஒரு சவரன் ரூ.87,600க்கும் சென்றது.

ஆனால் இன்று காலை விலை மீண்டும் சரிந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,840க்கும், ஒரு சவரன் ரூ.86,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,980க்கும், ஒரு சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.161க்கும், ஒரு கிலோ ரூ.1,61,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்ட இந்த சரிவு, பண்டிகை காலத்தை முன்னிட்டு நகை வாங்குவோருக்கு சிறந்த வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.