சென்னையில் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்த நிலையில் இருந்தது. 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.10,000ஐ கடந்தது. ஆனால், சமீபத்தில் தங்கம் விலை மெல்ல குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, தங்கம் ரூ.10,135 என்ற உச்சத்தைக் தொடந்தது. 22 காரட் தங்கம் ரூ.9290க்கு விற்றது.

பின்னர் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.ஏப்ரல் 26 அன்று, ஆபரண தங்கம் ரூ.9005க்கு விற்கப்பட்டது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை குறைவைக் குறித்துப் பேசினார். தங்கம் விலையில் நற்செய்தி தொடரும் என்றும், தேவையானவர்கள் இப்போது தங்கம் வாங்கலாம் என்றும் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தங்கத்தின் விலை ரூ.7000 அல்லது ரூ.5000 ஆகிவிடும் என்று நம்ப வேண்டாம் எனவும் கூறினார். டிரம்ப் அரசியல் காரணமாக தற்காலிக வீழ்ச்சி ஏற்பட்டது என்றும், மீண்டும் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய ரூபாயின் நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி பாதுகாத்து வருகிறது. ஆனால் சீனாவின் யுவான் மதிப்பு 20% குறைந்துள்ளது. இதன் தாக்கம் சர்வதேச வர்த்தகத்தில் அதிகம் பார்க்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு சீக்கிரமே பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரூபாய் மதிப்பு வீழ்வதால், தங்க விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கம் வாங்க டாலர் தேவைப்படும் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இது முதலீட்டுத் தீர்மானம் அல்ல என்றும், முதலீட்டுக்கு முன் ஆலோசனை பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.