இந்தியாவில் தங்கம் எப்போதும் மங்களகரமான மற்றும் மதிப்புமிக்க பொருளாக கருதப்படுகிறது. திருமணங்கள், பண்டிகைகள் மற்றும் பரிசளிப்புகளில் மக்கள் தங்கத்தை அதிகமாக வாங்குவார்கள். கடந்த சில மாதங்களில், தீபாவளி பருவத்தையும் மையமாகக் கொண்டு தங்க விலை வரலாற்று உயரத்தில் உள்ளது. வெள்ளியின் விலை கூட தொடர்ந்து உயரும் போக்கில் உள்ளது. இதனால், 2050-ம் ஆண்டில் தங்கத்தின் விலை எவ்வாறு இருக்கும் என்பதற்கான ஆராய்ச்சி தற்போது கவனத்திற்கு வந்துள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் தங்க விலை சராசரியாக ஆண்டுக்கு 8 சதவீதம் உயர்ந்துள்ளது. நிபுணர்கள் கணிக்கின்றனர், இதே விதம் தொடர்ந்தால் 2050-ம் ஆண்டுக்குள் தங்கத்தின் மதிப்பு சுமார் 25 மடங்கு அதிகரிக்கும். அதன்படி ஒரு கிலோ தங்கம் குறைந்தபட்சம் ரூ.30 கோடி முதல் அதிகபட்சம் ரூ.35 கோடி வரை இருக்கலாம். சராசரி விகிதம் 10 சதவீதமாக இருந்தால், மதிப்பு ரூ.45 கோடி வரை உயரும் வாய்ப்பு உள்ளது.
தங்கத்தில் முதலீடு செய்வது, பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பான வழியாக கருதப்படுகிறது. நீண்டகால முதலீடாக தங்கத்தை வைத்தால் ஓய்வு காலம் அல்லது அவசரச் சூழலில் நன்கு வருமானம் பெற முடியும். விலை ஏற்ற இறக்கங்கள் இருக்கும், ஆனால் நீண்டகால கண்ணோட்டத்தில் முதலீடு செய்தால் நன்மை உறுதி செய்யப்படும்.
இந்நிலையில், வருங்காலத்திற்கான தங்க விலை முன்னறிவிப்பு, முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் முக்கிய வழிகாட்டியாக அமைகிறது. 2050-ம் ஆண்டில், தங்கத்தின் மதிப்பு குறைந்தது ரூ.30 கோடி மற்றும் அதிகபட்சம் ரூ.50 கோடி வரை இருக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இது ஒரு எஸ்ஸடிமேஷன் மட்டுமே, ஆனால் முதலீட்டாளர்களுக்கு நீண்டகால திட்டமிடலில் உதவும்.