ஏப்ரல் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தினசரி விலை மாற்றங்கள் நகை பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கிராம் தங்கம் ரூ.6,000 அல்லது ரூ.7,000 என இருப்பது கூட அதிசயமாக இருந்த நிலையில், தற்போது ரூ.10 ஆயிரத்தை நெருங்கும் நிலையை பெற்றுள்ளது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சங்களை தொட்டுவருவதால், நகைகள் வாங்கும் கனவு சாமானிய மக்களுக்கு எட்டாததாகவே மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 24 ஏப்ரல் 2025 அன்று, தங்கத்தின் விலை சிறியளவில் குறைந்தது. அந்த நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.9,005 ஆகவும், ஒரு சவரன் ரூ.80 குறைந்து ரூ.72,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் நான்கு நாட்களுக்கு விலை மாற்றம் இல்லாமல் நிலைத்திருந்த நிலையில், இன்று 28 ஏப்ரல் 2025 அன்று தங்கம் விலை திடீரென மேலும் குறைந்துள்ளது. புதிய விலைப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.65 குறைந்து ரூ.8,940 ஆகவும், ஒரு சவரன் ரூ.520 குறைந்து ரூ.71,520 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, 18 காரட் தங்கத்தின் விலையும் குறைவடைந்துள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.55 குறைந்து ரூ.7,405 ஆகவும், ஒரு சவரன் ரூ.440 குறைந்து ரூ.59,240 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் சிறிய மாற்றம் பதிவாகியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து தற்போது ரூ.111 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திடீர் விலை குறைவால், தங்கம் வாங்க விரும்பும் நகை காதலர்கள் ஆர்வத்துடன் அணுகுகின்றனர். தங்கம் விலை மீண்டும் உயரக்கூடும் என நிபுணர்கள் கணிக்கையிட்டுள்ளதால், தற்போதைய விலை சரிவை பலர் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.