சென்னை: அமெரிக்க தேர்தல் முடிவு எதிரொலியாக கடந்த 7-ம் தேதி ஒரு சவரன் ரூ.1320 குறைந்து, ஒரு சவரன் ரூ.57,600-க்கு விற்பனையானது. மறுநாள் சவரன் ரூ.680 உயர்ந்து ரூ.58,280-க்கு விற்பனையானது. கடந்த 9-ம் தேதி தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.80 குறைந்து, சவரன் ரூ.58,200-க்கு விற்பனையானது.
கடந்த 11-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.57,760 ஆக இருந்தது. கடந்த 12-ம் தேதி சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680-க்கு விற்பனையானது. கடந்த 13-ம் தேதி ஒரு கிராம் ரூ.7045 ஆகவும், சவரன் ரூ.360 ஆகவும், சவரன் ரூ.56,360 ஆகவும் விற்பனையானது.
நேற்று தங்கம் விலை கடுமையாக சரிந்தது. ஒரு கிராம் ரூ.110 குறைந்து ரூ.6,935 ஆகவும், ஒரு கிராம் ரூ.880 குறைந்து ரூ.55,480 ஆகவும் இருந்தது. தொடர்ந்து 4 நாட்களில் தங்கம் விலை பார் ஒன்றுக்கு ரூ.2,720 குறைந்துள்ளது.