ஆகஸ்ட் மாத தொடக்கத்திலிருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. கடந்த வாரம் முதல் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் தங்கம் விலை, நகை பிரியர்களுக்கு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,295க்கும், ஒரு சவரன் ரூ.74,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஆகஸ்ட் 13ஆம் தேதி, 5வது நாளாகவும் விலை குறைவு தொடர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,290க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.74,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.7,675க்கும், ஒரு சவரன் ரூ.61,400க்கும் உள்ளது.
தங்க விலை குறைவுக்கு முக்கிய காரணமாக, ரஷ்யா-உக்ரைன் மோதல் முடிவிற்கு வருவதற்கான சாத்தியம் குறிப்பிடப்படுகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி அலாஸ்காவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சந்திக்க உள்ளனர். பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால் தங்கத்திற்கான தேவை மேலும் குறையக்கூடும்.
வெள்ளி விலையும் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.126க்கும், ஒரு கிலோ ரூ.1,26,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ச்சியான இந்த விலை சரிவு, வரவிருக்கும் விழாக்காலம் மற்றும் திருமண பருவத்திற்கு நகை பிரியர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.