சென்னை: சர்வதேச பொருளாதார நிலையைப் பொறுத்து இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது மாறுபடுகிறது. இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, ரூ.60,000 ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மேலும் அதிகரித்தது.

அதன்படி, கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.7,555 ஆகவும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.60,440 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் தூய தங்கம் ஒரு பவுன் ரூ.65,928-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.105 ஆக இருந்தது.ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,05,000 ஆக இருந்தது.