சென்னை: சேமிப்பின் அடையாளமாகக் கருதப்படும் தங்கம் விலை தொடர்ந்து உயரும் நிலையில், அக்டோபர் மாத தொடக்க நாளில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த மாத கடைசியில் (செப்டம்பர் 30) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.10,860க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
அக்டோபர் 01, 2025 அன்று, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,890க்கு, ஒரு சவரன் ரூ.87,120க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கம் விலை ரூ.87,000 க்கு மேல் சென்றுள்ளது.

அதேபோல், 18 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,015க்கு, சவரனுக்கு ரூ.72,120க்கு உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி 161 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,61,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம், நாணய முதலீட்டாளர்கள், நகை வாங்க விரும்புவோர் மற்றும் வணிகத்துறைக்கு முக்கிய தகவலாகும். இதன் அடிப்படையில், ஆயுத பூஜை போன்ற முக்கிய நாள்களில் தங்கம் வாங்கும் முன் விலை உயர்வு குறித்து கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.