சென்னை: கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
பவுன் ஒன்றுக்கு 3,000 வரை குறைந்த நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து மீண்டும் விலை அதிகரித்து வருகிறது. அதன்படி, இந்த வாரத்தில் தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.20 அதிகரித்துள்ளது. 75 ஆகவும், ஒரு கிராம் ரூ. 7,300 மற்றும் ஒரு பவுன் ரூ.600-க்கு உயர்ந்து ஒரு பவுன் ரூ.58,400-க்கு விற்பனையாகிறது.
கடந்த 6 நாட்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,920 அதிகரித்துள்ளது.