மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளிக் கட்டிகள் மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை குறைந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை 3000 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.
சவரன் நேற்றைய நிலவரப்படி ரூ.240 குறைந்து ரூ.51,080 ஆக இருந்தது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,385 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி (ஜூலை 31) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.280 உயர்ந்து ரூ.51,080 ஆக உள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ரூ.6,420 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 6,875 விற்பனையாகிறது. 24 காரட் தங்க சவரன் ரூ.55,000க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.91.00 ஆக உள்ளது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.91,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.