சென்னை: சென்னையில் 22 காரட் தங்க நகைகளின் விலை தொடர்ந்து 3-வது நாளாக இன்று குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளாகும்.
ஜனவரி தொடக்கத்தில், ஒரு பவுண்டு தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, தங்கத்தின் விலை உயர்ந்து, சரிந்து காணப்பட்டது. கடந்த 23-ம் தேதி, ஆபரண தங்கத்தின் விலை ரூ.75 ஆயிரத்தை தாண்டி, வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது.
இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி முதல் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இன்று தொடர்ந்து 3-வது நாளாக குறைந்துள்ளது. அதன்படி, இன்று 22 காரட் தங்க நகைகள் கிராமுக்கு ரூ.50 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,160-க்கு விற்கப்படுகிறது. தங்க நகைகள் பவுனுக்கு ரூ.73,280-க்கு விற்கப்படுகின்றன.

இது ரூ.400 குறைவு. கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை நிலவரம்:-
ஜூலை 26: பவுனுக்கு ரூ.73,280
ஜூலை 25: பவுனுக்கு ரூ.73,680
ஜூலை 24: பவுனுக்கு ரூ.74,040
ஜூலை 23: பவுனுக்கு ரூ.75,040
ஜூலை 22: பவுனுக்கு ரூ.74,280
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.126-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.1,26,000-க்கும் விற்கப்படுகிறது.