தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், விலைகள் மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
2026ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எவ்வளவு இருக்கும் என்ற கேள்விக்கு, சந்தை நிபுணர்கள் ஒரு கிராம் தங்கம் ரூ.15,000 வரை உயரக்கூடும் என தெரிவித்துள்ளனர். தங்க விலை குறைய வாய்ப்பு மிகக் குறைவு என்றும், உலக பொருளாதார சூழ்நிலை அதற்கு சாதகமாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல்கள், உலகளாவிய பணவீக்கம், மற்றும் அரசியல் நிச்சயமற்ற நிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக விளங்குகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையிலிருந்து பணத்தை எடுத்து தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்து வருகின்றனர்.
மேலும், அமெரிக்க அரசாங்கத்தின் கட்டண அறிவிப்புகள், வட்டி விகித மாற்றங்கள், சந்தை நம்பிக்கையைக் குறைத்துள்ளன. இதனால் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக தங்கம் மீண்டும் முதலீட்டாளர்களின் முதன்மை தேர்வாக மாறியுள்ளது.