சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.9,000-க்கும் கீழ் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் இன்று எதிர்பாராத விதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டில் உலகளாவிய பொருளாதார நிலவரம் மற்றும் அமெரிக்க வரி விதிப்பு காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்தது.

அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றமும் தங்கம் விலையில் பாதிப்பை ஏற்படுத்தியது.கடந்த சனிக்கிழமை ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9045-க்கும், ஒரு சவரன் ரூ.72,360-க்கும் விற்பனையானது. இன்று விலை ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.8880-க்கும், ஒரு சவரன் ரூ.71,040-க்கும் விற்பனையாகிறது.
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.7320 ஆகவும், ஒரு சவரன் ரூ.58,560 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளியின் விலையிலும் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.109 ஆகும் நிலையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,09,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை மாற்றம் தங்கம் முதலீட்டாளர்களிடம் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இருப்பினும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு பன்னாட்டு சூழ்நிலைகளும் முக்கிய காரணமாக அமைகின்றன. அதனால் எதிர்காலத்தில் விலைகள் மீண்டும் உயரும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.