சென்னை: சர்வதேச பொருளாதார நிலவரப்படி, இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் ஏற்பட்டு, அதிகமாகவும், குறைவாகவும் விற்கப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு பவுன் 59,000-க்கு விற்கப்பட்டது.
தீபாவளிக்குப் பிறகு தங்கம் விலை குறையத் தொடங்கியது. இந்நிலையில், நேற்று தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.7,355 ஆகவும், பவுன் ரூ.120 அதிகரித்து ரூ.58,840 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் தூய தங்கம் ஒரு பவுன் ரூ.62,880 ஆக இருந்தது. ஒரு கிராம் வெள்ளி ரூ.105-க்கு விற்பனையானது.
நேற்று ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,05,000 ஆக இருந்தது.