சென்னை: தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு தொடர்ந்து 4வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று (ஜூலை 26) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,415 ஆக உள்ளது. ஒரு பவுன் ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.89 ஆக உள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு கடும் சரிவை சந்தித்த தங்கம் விலை அக்டோபர் 4ம் தேதி ஒரு பவுன் ரூ.42,280க்கு விற்பனையானது.பின்னர் இஸ்ரேல்-பாலஸ்தீன போரின் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. டிசம்பர் 4-ம் தேதி ரூ.47,800, மார்ச் 28-ம் தேதி ரூ.50,000, ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 என்ற புதிய உச்சத்தைத் தொட்ட பவுன், பிறகு சற்று குறைந்தது.
கடந்த 23ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக ஒரே நாளில் விலை சரிந்தது. காலையில் பவுன் ரூ.54,480 ஆக இருந்த நிலையில், பிற்பகலில் ரூ.52,400 ஆக குறைந்தது.
நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.480 குறைந்த நிலையில், நேற்றும் ரூ.480 குறைந்தது. நேற்று ஒரு கிராம் ரூ.6,430க்கும், பவுன் ரூ.51,440க்கும் விற்பனையானது. இன்று ஒரு பவுன் ரூ.120 குறைந்து ரூ.51,320க்கு விற்கப்படுகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை ரூபாய்க்கு ரூ.3,160 குறைந்துள்ளது.
இன்னும் எத்தனை நாட்கள்! ஓரிரு வாரங்களுக்கு விலை சற்று மாறலாம். சர்வதேச அளவில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் தங்கத்தின் விலை மேலும் குறையும். ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரமாக குறைய வாய்ப்பு உள்ளது. ஆனால், ஆடி 18க்கு பிறகு விலை உயரும் என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.