சென்னை: தங்கம் விலை இன்று (ஜூலை 29) பவுனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை சற்று உயர்ந்து இன்று மீண்டும் குறைந்துள்ளது. இது இந்த வாரம் முழுவதும் தொடருமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு கடும் சரிவை சந்தித்த தங்கம் விலை, கடந்த மே 20ம் தேதி புதிய உச்சமாக ரூ.55,200ஐ தொட்டது.இதை தொடர்ந்து விலையில் ஏற்ற இறக்கம் இருந்தாலும், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இறக்குமதி வரி குறைப்பால் விலை குறைய துவங்கியுள்ளது. கடந்த ஜூலை 23ம் தேதி முதல் 26ம் தேதி வரையிலான பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலை சரிந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (ஜூலை 27) சற்று உயர்ந்தது.
அன்றைய தினம், 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து கிராமுக்கு ரூ.6,465 ஆகவும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து பவுனுக்கு ரூ.51,720 ஆகவும் இருந்தது. இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) சென்னையில் 22 காரட் அலங்கார தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,415 ஆக உள்ளது. பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.89.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.