தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஓராண்டில் ஒரு லட்சம் வரை உயர வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து, செப்டம்பர் 24-ம் தேதி ஒரு பவுன் ரூ.56,000ஐ தாண்டி, கடந்த 16-ம் தேதி ரூ.57,000ஐ தொட்டது.
இதையடுத்து கடந்த 19ம் தேதி தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை தாண்டியது. நேற்று மட்டும் ரூ.250 உயர்ந்து ஒரு பவுன் ரூ.59,000க்கு விற்பனையாகிறது.
“தங்கம் விலை புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது. உலக பொருளாதாரம் மற்றும் சர்வதேச போர் சூழல் காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு மேலும் அதிகரிக்கும்” என்கின்றனர் நகை வியாபாரிகள். கடந்த ஆண்டில், தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் 41 சதவீத லாபத்தைப் பெற்றதாகவும், வெள்ளி 54 சதவீத லாபத்தைப் பெற்றதாகவும் தெரிவித்திருந்தது.
தீபாவளிக்கு தங்கம் விலை எப்படி இருக்கும் என முன்னணி வர்த்தகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த விலை மாற்றம் தொடரும் என தெரிவித்துள்ளனர். தீபாவளிக்கு பிறகு தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 அல்லது 150 குறையலாம், ஆனால் அடுத்த 6 மாதங்களில் ஒரு கிராம் ரூ.1000 வரை உயர வாய்ப்பு உள்ளது.
இஸ்ரேல்-ஈரான் மற்றும் இஸ்ரேல்-லெபனான் போர்கள், தைவான் மீதான சீனாவின் வேட்டையாடுதல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் சூழ்நிலை ஆகியவற்றின் பதட்டங்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தூண்டுகிறது.
வரும் காலங்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் சவரன் ரூ.1 லட்சத்தை தொடும் வாய்ப்பு உள்ளது என்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விலை ஏற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.