
சென்னை: சென்னையில் இன்று தங்க நகைகளின் விலை ஒரு பவுனுக்கு ரூ. 560 உயர்ந்தது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை தற்போது உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 7,160 மற்றும் பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு பவுன் ரூ. 57,280 விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 98-க்கு விற்பனையாகிறது. உலகிலேயே அதிக தங்கம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில், சர்வதேச பொருளாதார சூழலை பொறுத்தே இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையின் போது உச்சத்தை எட்டிய தங்கம் விலை, இந்த வார தொடக்கத்தில் ஒரு பவுனுக்கு ரூ. 1,760 வரை குறைந்தது. இந்நிலையில், இது இன்று ஒரு பவுனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.