2025ம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன் பிறகு விலை சற்று குறைந்தாலும், கடந்த இரண்டு நாட்களில் மீண்டும் உயர்ந்துள்ளது. இது நகைத் துறையிலும் முதலீட்டாளர்களிடமும் புதிதாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 2ம் தேதி ஒரு கிராம் 22 காரட் தங்கம் ரூ.9,065க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.72,520 ஆக இருந்தது. ஆனால், ஜூலை 3ம் தேதி காலை நிலவரப்படி தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.9,105ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.72,840ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 18 காரட் தங்கம் ரூ.7,515க்கும், ஒரு சவரன் ரூ.60,120க்கும் விற்கப்படுகிறது. இது கடந்த நாளை விட கிராமுக்கு ரூ.35, சவரனுக்கு ரூ.280 உயர்வு பெற்றுள்ள நிலை.
தங்க விலையில் ஏற்பட்ட இந்த உயர்வோடு, வெள்ளி விலையும் ஓரளவு அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.121க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை தற்போது ரூ.1,21,000 ஆக உள்ளது. தொடர்ந்து இந்த விலை உயர்வு நிலவுமா என்ற கேள்வி முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ளது.