சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலை தொடர்கிறது. கடந்த நான்கு நாட்களில் சவரன் தங்கம் மட்டும் ரூ.3000 வரை உயர்ந்துள்ளது. இந்தப் புதிய விலை உயர்வு இன்று கூட மேலும் அதிகரித்து, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் விலை ஜூன் 10ம் தேதி முதல் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் உயர்வை சந்தித்து வருகிறது. ஜூன் 11ம் தேதி சவரன் ரூ.72,160 ஆக இருந்த நிலையில், தற்போது அது ரூ.74,560 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ஒரே சவரனுக்கு ரூ.200 உயர்வு இன்று மட்டும் ஏற்பட்டுள்ளது. இதனோடு ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9320 ஆக உள்ளது.
தங்கத்தின் விலை இவ்வளவு வேகமாக உயரும் நிலை, விரைவில் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்தவிருக்கும் குடும்பங்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. பெண்கள் இந்த உயர்வால் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். தங்க நகை வியாபாரிகள் இந்த விலை நிலைமைகள் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், விலை ஏற்ற இறக்கங்களை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
தங்கத்தின் விலை உயர்வு சர்வதேச சந்தை நிலவரம், டாலர் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் வர்த்தக போக்குகளுக்கு ஏற்ப மாறி வருகின்றது. இருப்பினும், சவரன் விலை இவ்வாறு ஒரு சில நாட்களில் ரூ.3000 உயர்ந்துள்ள நிலை, தங்கம் வாங்க திட்டமிடும் மக்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.