சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பண்டிகை மற்றும் முகூர்த்த தினங்களுக்கு நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது.
இன்று (செப்டம்பர் 16) காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத்தின் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, கிராமுக்கு ரூ.6,880 ஆக உள்ளது. ஒரு பவுன் ரூ.120 அதிகரித்து ரூ.55,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.98-க்கு விற்பனையாகிறது. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பு மற்றும் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
மேலும், உள்நாட்டில், வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதால், முகூர்த்தநாட்களால், தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.