சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ஒன்றுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏறி இறங்குகிறது. அந்த வகையில், தீபாவளியன்று (அக்டோபர் 31) வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் தங்கம் ரூ.59,640-க்கு விற்பனை செய்யப்பட்டு, வரலாற்றில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் நாட்களில் தங்கம் விலை பல மடங்கு உயரும் என எச்சரிக்கப்பட்டது. சில ஆண்டுகளில் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்தை தொடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று குறைந்திருந்த தங்கம் விலை தற்போது அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.320 உயர்ந்தது.
இதனால், சவரன் ரூ.57,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.