சென்னை: சென்னையில் இன்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,800 ஆக உள்ளது.
நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 ஆக சரிந்த நிலையில், இன்று ஏற்றம் கண்டுள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.56,800-க்கு விற்பனையாகிறது.
கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.