சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து ரூ.53,680 ஆக உள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,710-க்கு விற்பனையானது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.92 ஆக உள்ளது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தது. இது அனைவருக்கும் தெரியும். தென்னிந்தியாவில் குறிப்பாக தங்கம் இருப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாட்டுப் பெண்கள் தங்க நகைகளை அதிகம் விரும்புவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. இந்நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.80 குறைந்து ரூ.53,280க்கு விற்பனையானது. அதேபோல், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,660 ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து ரூ.53,680 ஆக உள்ளது. 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,710 ஆக இருந்தது.
24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,165க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்க சவரன் ரூ.57,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.92.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.