சென்னை: சென்னையில் இன்று 22 காரட் நகைகள் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.55,680 ஆக உள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,960-க்கும், பவுன் ரூ.600-க்கும், பவுன் ரூ.55,680-க்கும் விற்பனையானது.
வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.98 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைத்ததாலும், சர்வதேச அளவில் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதாலும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மேலும், நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக உள்நாட்டிலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.