சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160 ஆக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலையைப் பொறுத்து இந்தியாவில் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் உள்ளது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,270 ஆகவும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160 ஆகவும் இருந்தது.

அதேபோல், 24 காரட் தூய தங்கம் ஒரு பவுன் ரூ.72,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.2 குறைந்து ரூ.112 ஆக இருந்தது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,12,000 ஆக இருந்தது.