ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பயனர்களுக்கு 5ஜி இணைய வேகத்தை வழங்கி வரும் நிலையில், தற்போதுதான் பிஎஸ்என்எல் 4ஜி பற்றி அறிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்த மாதம் முதல் 4ஜி சேவையை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக பத்தாயிரம் மொபைல் டவர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ மூலம் புதிய 4ஜி ரீசார்ஜ் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 4ஜி இணையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
BSNL 4G திட்டங்களை அறிவித்துள்ளதால் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் உடன் போட்டியிட ஜியோ தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.