ஜூலை மாதம் முழுக்கவே ஏற்ற இறக்க நிலையை சந்தித்த தங்கம் விலை, இன்று மாதத்தின் கடைசி நாளில் பெரிதும் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்க ஆவலாக இருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று (ஜூலை 30) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.9,210 ஆகவும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,680 ஆகவும் இருந்தது. ஆனால் இன்று (ஜூலை 31), திடீரென விலை குறைந்து, 22 காரட் தங்கத்தின் கிராம் விலை ரூ.40 குறைந்ததுடன், ரூ.9,170 ஆகவும், சவரன் ரூ.320 குறைந்து ரூ.73,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,565 ஆகவும், ஒரு சவரன் ரூ.60,520 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாது, வெள்ளியின் விலையும் ரூ.2 குறைந்து கிராமுக்கு ரூ.125 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா இந்தியா மீது 25% இறக்குமதி வரி விதித்ததன் பின்புலத்தில் இந்த விலை குறைவு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் இன்று பெரிய அளவில் ஆபரணக் கடைகளை நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.