சென்னை: சென்னையில் இன்று 22 காரட் தங்க ஆபரணத்தின் விலை பவுனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் தங்க நகை விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7,205 ஆகவும், பவுன் ரூ.600 ஆகவும் உயர்ந்து, பவுன் ரூ.57,640 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகிலேயே அதிக தங்கம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில், சர்வதேச பொருளாதார சூழலை பொறுத்தே இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின் போது உச்சத்தை எட்டிய தங்கம் விலை, அதன்பிறகு சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது.