தங்கத்தின் விலை இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நிலையான ஏற்றத்தை கண்டுவருகிறது. இதற்கு பல காரணங்கள் காரணமாக உள்ளன. முக்கியமாக அமெரிக்க டாலரின் பலவீனம், பெடரல் ரிசர்வின் வட்டி விகிதக் குறைப்பின் எதிர்பார்ப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. இந்தியாவில் தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்சத்தைத் தாண்டி உள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான அரசியல் பதட்டம் கூடுதலாக விலையை தூண்டியுள்ளது.

அமெரிக்க சந்தையும் இதேபோன்ற நிலையை எதிர்கொள்கிறது. மே மாதத்தில் தொடர்ச்சியாக 5-வது மாதமாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. இது 2017க்குப் பிறகு இவ்வாறு நிகழும் மிகப்பெரிய தொடர்ச்சி. ஜூன் மாதத்தில் மட்டும் 3% அதிகரித்துள்ள தங்கம், இந்த மாத இறுதியில் பாசிட்டிவாக முடிந்தால், 6 மாத வெற்றித் தொடரை அடையும். இது கடந்த 2002ஆம் ஆண்டில்தான் கடைசியாக நிகழ்ந்தது. இதுபோன்ற தொடர்ச்சி கடந்த 75 ஆண்டுகளில் 13 முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது என்கிறது ஒரு ஆய்வு.
தங்கத்தின் விலை அடுத்த 12 மாதங்களில் 85% வரை உயர வாய்ப்பு இருப்பதாகும். சராசரியாக 50% வருமானம் கிடைத்துள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன. டாலரின் மதிப்பிழப்பு காரணமாக தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த கால வரலாறுகளும் இதனை உறுதி செய்கின்றன.
ஜூலியஸ் பேர் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கூறுகையில், தற்போதைய புவி அரசியல் சிக்கல்கள் பெரிதாக பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றால், தங்க சந்தையில் பெரிதாக மாற்றம் வராது. ஆனால் அரசியல் மற்றும் பொருளாதார துருவ நிலைகளின் காரணமாக தங்கத்தில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை தொடரும்.
Axis Securities நிறுவனம் கூறுவதாவது, குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை $3,600-$3,800 வரை செல்லலாம். ஆனால் $3,245 கீழ் சென்றால், $3,000 கீழ் போகும் அபாயமும் உள்ளது. இதனால் ஸ்விங் டிரேடர்களுக்கு இது வாய்ப்பாக இருக்கலாம்.
தங்கத்தில் முதலீடு செய்வது தற்போது சரியான நேரம் என சிலர் கருதினாலும், நிபுணர்கள் கூறுவது பங்காக முதலீடு செய்யும் SIP முறை சிறந்தது என. நகை வாங்கும்போது வரும் கூடுதல் செலவுகள் காரணமாக முழுமையான லாபம் பெற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.