ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால், ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து 12% பிடித்தம் EPF கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. அதே அளவு நிறுவனமும் பங்களிப்பை சேர்க்கிறது. நிறுவன பங்களிப்பு 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது: 3.67% EPFக்கு, 8.33% EPS (Employee Pension Scheme)க்கு மற்றும் ஒரு சிறிய பங்கு EDLI இன்சூரன்ஸிற்கும் செல்கிறது. இந்த தொகைகள் பணி ஓய்வின் பின்னர் உங்கள் வாழ்க்கைக்கு உதவும்.

EPS கணக்கில் குறைந்தது 10 வருட பங்களிப்பு இருந்தால், 58 வயதில் பென்ஷன் பெறலாம். EDLI திட்டத்தின் கீழ், ஊழியர் இறந்தால் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் பலன்கள் வழங்கப்படும். மேலும், 50 வயதுக்கு பிறகு பென்ஷன் பெற ஆரம்பித்தால் தொகை சற்று குறைவாக இருக்கும். 60 வயதுக்கு பிறகு பெறுபவர்கள் கூடுதலாக 4% பென்ஷன் கூடுதலைப் பெறுவர்.
UAN மூலம் உங்கள் EPF மற்றும் EPS பங்களிப்புகளை எளிதில் தெரிந்துகொள்ளலாம். EPFO வெப்சைட்டில் லாகின் செய்து, ‘EPF பாஸ்புக்’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, டெபாசிட் செய்த பணம் மற்றும் EPS பங்களிப்புகளை காணலாம். EPS ஆக்டிவாக இருந்தால், நீங்கள் பென்ஷன் பெற தகுதி பெற்றுள்ளதாகக் கருதலாம்.
PF பணத்தை வித்டிரா செய்வதற்கான விதிகள் பலவாக உள்ளன. 5 வருட சேவை காலத்தை பூர்த்தி செய்யும் முன் வித்டிரா செய்வதில் வரி செலுத்த தேவையில்லை. திருமணம், வீடு கட்டுதல், மருத்துவ சிகிச்சை அல்லது குழந்தைகளின் கல்வி போன்ற காரணங்களுக்கு பாதி தொகையை முன்னதாகவே எடுத்துக்கொள்ளலாம். பணி ஓய்வுக்கு பிறகு அல்லது வேலையை விட்ட 2 மாதங்கள் கழித்து முழு தொகையையும் வித்டிரா செய்யலாம்.