டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய மின்சார மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஹூண்டாய் இந்தியா நிறுவனம், தற்போது கார்பன் வெளியேற்றத்தை பூஜ்ஜியமாக்கும் நோக்கில் மின்சார மூன்று சக்கர வாகனங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
இதன் கீழ், இந்த புதிய வாகனத்தின் வடிவமைப்பு மற்றும் பொறியியல் பணிகளை ஹூண்டாய் கவனிக்கும். ஒப்பந்தத்தின் அடிப்படையில், டிவிஎஸ் மின்சார முச்சக்கர வண்டியை தயாரித்து வழங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு தனது சொந்த மின்சார மூன்று சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ், மின்சார வாகனத் துறையில் புதிய பரிமாணங்களை எட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறது.