இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக UPI அடிப்படையிலான பணப் பரிவர்த்தனைகள் மக்கள் வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. 2016 ஆம் ஆண்டு NPCI நிறுவனம் தொடங்கிய UPI சேவை இன்று பலருக்கும் பண பரிமாற்றத்தில் முக்கிய கருவியாக உள்ளது. ஆனால், இத்துடன் மோசடிகளும் உயர்ந்துள்ளன. பல பயனர்கள், நேர்மையாக சம்பாதித்த பணத்தை, சாமான்யமான பிழைகளால் இழந்து வருகிறார்கள்.

பணத்தை திருப்பி தரும் வித்தை, போலியான QR குறியீடு, திடீர் மருத்துவ அவசரமென வாட்ஸ்அப் செய்தி, போலி UPI ஆப் மற்றும் ஃபிஷிங் லிங்குகள் என பல சூழ்ச்சிகள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஆள்மாறாட்டம் செய்து வங்கி அதிகாரிகள் போல பேசி OTP கேட்பது போன்ற முறை கூட வலுவாக இயங்குகிறது.
இந்த மோசடிகளைத் தவிர்க்க, உங்கள் PIN நம்பரை யாரிடமும் பகிரக்கூடாது. சந்தேகத்திற்கிடமான லிங்குகளை கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். நம்பகமான அப்ளிகேஷன்களையே பயன்படுத்த வேண்டும். Truecaller போன்ற ஆப்ஸ் மூலம் அழைப்புகளை சோதிக்கலாம். வங்கி அதிகாரிகள் ஒருபோதும் PIN கேட்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் மோசடி அதிகரிக்கும்போது, உங்கள் பணத்தை பாதுகாப்பது உங்கள் பொறுப்பாகிறது. செயல்களை அடிக்கடி கண்காணிக்கவும், சந்தேகமுள்ள நடவடிக்கைகள் ஏற்பட்டால் உடனடியாக வங்கியிடம் புகாரளிக்கவும். PIN மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை பாதுகாப்பது, நம்பிக்கையான செயலிகளை மட்டுமே பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
அந்த வகையில், விழிப்புடன் செயல்படுபவர்களே பணத்தை பாதுகாக்க முடியும். உங்களை பாதுகாத்துக் கொள்ள அறிவு மற்றும் நிதானம் முக்கியம். டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில், நம்பகமற்ற இணைப்புகள் மற்றும் அழைப்புகளை தவிர்ப்பதில்தான் தீர்வு இருக்கிறது.