இந்தியாவில், அக்டோபர் மாதத்தில் முறையான வேலைவாய்ப்பு உருவாக்கம் 13.40 லட்சமாக குறைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 28.70 சதவீதம் குறைவு. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.80 சதவீதம் குறைவு.
கடந்த செப்டம்பர் காலாண்டில், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.20 சதவீதமாக குறைந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஆனால், ஏற்றுமதி சரிவால் வர்த்தக பற்றாக்குறை ரூ.6.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த வாரத்தில் மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு 46 காசுகள் குறைந்துள்ளது. வெள்ளியன்று வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.85.48 ஆக இருந்தது. ரூபாய் மதிப்பு சரிவு சந்தையை பாதித்துள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை 91 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீடுகள் மூலம் ரூ.1.60 லட்சம் கோடி நிதி திரட்டியுள்ளன. அரசின் செலவு அதிகரிப்பு, நல்ல பருவமழை மற்றும் வலுவான கிராமப்புற வளர்ச்சி போன்ற காரணங்களால் அடுத்த ஆண்டு கார் விற்பனை 5 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசு நிறுவனமான டிபிஐஐடியின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஸ்டார்ட்அப்கள் 16 லட்சம் வேலைகளை உருவாக்கியுள்ளன. கடந்த 25ம் தேதி வரை மொத்தம் 1.57 லட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான நுகர்வு இடைவெளி தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய அரசின் வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரி மாத நுகர்வு செலவு கிராமப்புறங்களில் 9.20 சதவீதம் அதிகரித்து ரூ.4,122 ஆகவும், நகர்ப்புறங்களில் 8.30 சதவீதம் அதிகரித்து ரூ.6,996 ஆகவும் உள்ளது.
உள்வரும் மற்றும் வெளியிடப்பட்ட தரவுகள் வரும் வாரத்தில் இந்தியப் பொருளாதாரம் பற்றிய தெளிவான படத்தைக் கொடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் வரும் வாரத்தில் மக்களுக்கு பல்வேறு சவால்களும் வெற்றிகளும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.