வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. உலக சந்தையின் போக்குகளுக்கு ஏற்ப, குறியீடுகள் ஆரம்ப வர்த்தகத்தில் சரிவுடன் தொடங்கியது.
பிற்பகலுக்கும் ஊசலாட்டம் தொடர்ந்ததால், எச்சரிக்கையுடன் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கியதால், சந்தைக் குறியீடுகள் சரிவுப் பாதைக்குத் திரும்பின.
நிஃப்டி குறியீட்டில் வங்கித் துறை பங்குகள் அதிக நஷ்டத்தை சந்தித்தன. சென்செக்ஸ் குறியீட்டில், 2,892 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும், 1,040 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தபோதும், 79 நிறுவனங்களின் பங்குகள் மாறாமல் வர்த்தகமாகின.
வெளிநாட்டு முதலீடுகள் சற்று குறைந்திருப்பது ஆறுதலாக இருந்தாலும், இரண்டாம் காலாண்டு முடிவுகள் சந்தைக்கு ஆதரவளிக்காததால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் அணுகுகின்றனர் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று ரூ.4,614 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 0.63 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 71.57 டாலராக உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.84.09 ஆக உள்ளது.
நிஃப்டி 50ல் அதிக லாபம் ஈட்டியவர்கள்: அதானி எண்டர்பிரைசஸ், ஹீரோ மோட்டோகார்ப், டாடா கன்சூமர், பிரிட்டானியா, மாருதி. மிகப்பெரிய நஷ்டம்: சிப்லா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி லீப், ட்ரெண்ட், இன்ஃபோசிஸ்.