பெரும்பாலான மக்கள் பர்சனல் லோன்களை பயணம், பண்டிகை கால ஷாப்பிங், மருத்துவ அவசரங்கள், வேலை இழப்பு போன்ற காரணங்களுக்காக பெறுகின்றனர். பண்டிகை காலம் நெருங்கிவரும் நிலையில், இந்தக் கடன்களுக்கு தேவைகள் அதிகரித்துள்ளன. முன்னணி வங்கிகள் குறைந்த வட்டியில் பர்சனல் லோன்களை வழங்குவதோடு, நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்டவர்களுக்கு ப்ராசசிங் கட்டண தள்ளுபடியும் வழங்கப்படுகின்றது.

பர்சனல் லோன் என்பது உத்தரவாதம் இல்லாத கடன் என்பதால், வங்கிகளின் ரிஸ்க் அதிகரிக்கிறது. இதனால் விண்ணப்பதாரர்களின் கிரெடிட் ஸ்கோர், வருமான நிலை, வேலை வாய்ப்பு போன்றவை கவனமாக ஆய்வு செய்யப்படுகின்றன. பொதுவாக பர்சனல் லோன்களுக்கு 9.99% முதல் 13.75% வரை வட்டி விகிதம் வசூலிக்கப்படுகிறது. மேலும், அதிகபட்சமாக 5 வருடங்கள் வரை திருப்பி செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் போட்டியுடன் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 10.10% வட்டி விகிதத்தில் கடன் வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 10.5%, யூனியன் வங்கி 10.75%, பேங்க் ஆஃப் பரோடா 10.90% வட்டியில் கடன்களை வழங்குகின்றன. கனரா வங்கி 13.75% வட்டி விகிதத்துடன் வழங்குவதால் சற்றே அதிகமாகும்.
தனியார் வங்கிகளில் ஆக்சிஸ் வங்கி 9.99% வட்டி விகிதத்துடன் முன்னிலையில் உள்ளது. அதேசமயம் ICICI வங்கி 10.6%, HDFC வங்கி 10.9%, கோடாக் மஹேந்திரா வங்கி 10.99%, மற்றும் Yes வங்கி 11.25% வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன. 5 லட்ச ரூபாய் கடனுக்கு 5 வருட கால அவகாசத்தில் மாத தவணை சுமார் 10,600 முதல் 11,500 ரூபாய் வரை மாறுபடும். கடன் பெறுவோர் தங்களின் தேவைக்கும் கிரெடிட் ஸ்கோருக்கும் ஏற்றவாறு சரியான வங்கியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.