சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வடைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 28) சவரனுக்கு ₹840 அதிகரித்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ₹8,340க்கும், சவரன் ₹66,720க்கும் விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு 3 உயர்ந்துள்ளது.
இதனால் 1 கிராம் ₹114க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,14,000க்கும் விற்பனையாகிறது. கடந்த வார இறுதியில் தங்கம் விலை சரிந்த நிலையில், இந்த வாரம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.