செனனை: சென்னையில் இன்றைய நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ.57,720-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து புதன்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 57,800-க்கும் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,080-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,280-க்கும் விற்பனையாகிறது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,520-க்கும் கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,315-க்கும் விற்பனையாகிறது.
இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.