அமேசான் தனது மிகப்பெரிய ஆண்டு விற்பனையாகும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2025 விற்பனையை தொடங்கியுள்ளது. பிரைம் உறுப்பினர்களுக்கான முன்னோட்ட விற்பனை தற்போது தொடங்கியுள்ளது; மற்றவர்கள் செப்டம்பர் 23ஆம் தேதி விற்பனையில் கலந்துகொள்ளலாம். இதில், SBI வங்கியுடன் இணைந்து, டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

விற்பனைக்காக ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்புகள், எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்கள் தள்ளுபடியில் கிடைக்கும். சில முக்கிய ஸ்மார்ட்போன்கள்:
- சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா: ரூ.1,30,531 முதல், ரூ.50,000 மதிப்புள்ள எக்ஸ்சேஞ்ச் சலுகை.
- ஆப்பிள் ஐபோன் 15: ரூ.45,999, SBI கார்டுகளுடன் 10% கூடுதல் தள்ளுபடி.
- ஒன்பிளஸ் 13R: ரூ.37,999, ரூ.2,000 வங்கி தள்ளுபடி மற்றும் EMI விருப்பங்கள்.
- ரெட்மி 4A (2025): ரூ.7,499, மிக மலிவான 4G ஸ்மார்ட்போன்.
எலக்ட்ரானிக் சாதனங்களில்:
- ஆப்பிள் மேக் மினி (2024): ரூ.49,999
- சாம்சங் கேலக்ஸி டேப் S9: ரூ.39,999 முதல்
- மேக்புக் ஏர் M4 (2025): ரூ.80,990 முதல்
- HP விக்டஸ் கேமிங் லேப்டாப்ப்: ரூ.99,990
- சாம்சங் கேலக்ஸி வாட்ச் 6 கிளாசிக்: ரூ.15,999
அமேசான் டிவைசுகளில் சிறந்த சலுகைகள்:
- கிண்டில் பேப்பர்வைட்: ரூ.7,899
- அமேசான் எக்கோ டாட் (5ம் ஜென்): ரூ.4,449
- ஃபையர் TV ஸ்டிக் HD: ரூ.2,499
இந்த பண்டிகை விற்பனையில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் EMI விருப்பங்களுடன் வாடிக்கையாளர்கள் சிறந்த சலுகைகளைப் பெற முடியும்.