தற்போது BSNL சிறப்பு சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வரும் நிலையில், திடீரென வெறும் 797 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 300 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் ஆண்டு ரீசார்ஜ் சுமார் ரூ.3000 ஆக இருக்கும் நிலையில், BSNL 300 நாட்கள் வேலிடிட்டிக்கு ரூ.799 மட்டுமே வசூலிப்பது ஆச்சரியமாக உள்ளது.
இந்த ரீசார்ஜ் திட்டத்தின் படி பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்புகளை அனுபவிக்க முடியும் என்பதும், உள்வரும் வரம்பை மட்டுமே பயன்படுத்தும் பலருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறைந்த பட்சம் 200 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 10 மாதங்களுக்கு 2000 ரூபாய் தான், வெறும் 797 வசதியுடன் கூடிய இந்த ரீசார்ஜ் திட்டத்தில் பலர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வர உள்ள நிலையில், தற்போது 4ஜி தொழில்நுட்பத்தை தனது பயனர்களுக்கு வழங்கி வருகிறது. எனவே இந்த திட்டத்தின் கீழ் அதிகமான வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.