புதுடெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘மாருதி ஜிம்னி’ முன்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 கதவுகளைக் கொண்ட ‘மாருதி ஜிம்னி’ மாடல் கார்கள் ஜப்பானில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது.
அறிமுகமான 4 நாட்களில் 50,000 முன்பதிவுகள் குவிந்தன. 1,200 கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் தேவையை உடனடியாக பூர்த்தி செய்ய முடியாத குழல் நிலவுகிறது. இந்த காரை வாங்க 3.5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருப்பதால் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.