புதுடில்லி: உள்ளீட்டு பொருட்கள் மற்றும் இயக்கச் செலவுகள் அதிகரிப்பால், மாருதி சுசூகி நிறுவனம் தனது பல்வேறு மாடல் கார்களின் விலையை வரும் பிப்ரவரி 1 முதல் உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே, இதே காரணங்களுக்காக 2025, ஜனவரி 1 முதல் விலையை 4 சதவீதம் வரை உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வை அறிவித்துள்ளது.
இதன்படி, மாருதி சுசூகி நிறுவனம் தனது கார்களின் விலையை குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 32,500 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. வெவ்வேறு மாடல்களில் விலைகள் மாற்றப்பட்டுள்ளன. செலிரியோ மாடலில் 32,500 ரூபாய், இன்விக்டோவில் 30,000 ரூபாய், வேகன் ஆர்-ல் 15,000 ரூபாய், ஸ்விப்டில் 5,000 ரூபாய், பிரஸ்சாவில் 20,000 ரூபாய், கிராண்ட் விதாராவில் 25,000 ரூபாய், ஆல்டோ கே10-ல் 19,500 ரூபாய் விலையை உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், எஸ்-பிரஸ்ஸோ 5,000 ரூபாய், பலினோ 9,000 ரூபாய், ஃப்ரோனெக்ஸில் 5,500 ரூபாய், டிசையரில் 10,000 ரூபாய், எர்டிகாவில் 15,000 ரூபாய், எக்கோவில் 12,000 ரூபாய், சூப்பர் கேரியில் 10,000 ரூபாய், இக்னிஸ் 6,000 ரூபாய், சியாஸ் மற்றும் ஜிம்னி மாடல்களில் 1,500 ரூபாய் விலையை உயர்த்தியுள்ளதாக மாருதி சுசூகி அறிவித்துள்ளது.