மைக்ரோசாப்ட் நிறுவனம், 1975ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோரால் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. இன்று இந்த நிறுவனம் உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமாக மாறியுள்ளது. 50 ஆண்டுகளின் பெரும் சாதனையை கொண்டாடும் வகையில் பில்கேட்ஸ் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இன்றைய தொழில்நுட்ப உலகில் மைக்ரோசாப்ட் அத்தனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. 50 ஆண்டுகளாக உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றத்தில் முன்னணி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. பில்கேட்ஸ் கூறியது போல, “50 ஆண்டுகள் என்பது மிகப்பெரிய சாதனை. ஸ்டீவ் பால்மர் மற்றும் சத்யா நாதெல்லா போன்ற தலைவர்களின் ஆதரவின் இந்த சாதனைகள் சாத்தியமாகவில்லை” என்று அவர் நினைவுறுத்தியுள்ளார்.
இந்த நிறுவனம் எவ்வாறு ஆரம்பமானது என்ற கேள்விக்கு பில்கேட்ஸ் கூறியது, “நான் மற்றும் பால் ஆலன் ‘எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற புதிய தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கிய போது, மிட்ஸ் என்ற எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கட்டுரையைப் பார்த்தோம். அதில் பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி வரப்போகிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம்” என்று அவர் குறிப்பிட்டார்.
பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் எப்போது அதற்கேற்ற ப்ரோக்ராம் தயாரிக்க முடியும் என நிறுவன உரிமையாளரை சந்தித்தனர். அவர் ஒப்புக்கொண்டதும், மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவானது. தொடக்கத்தில், மைக்ரோசாப்ட் தனிப்பட்ட கணினிகளுக்கான மென்பொருட்களை உருவாக்கியது.
மிகவும் வலுவான கோடிங் எழுதிய பில்கேட்ஸ், “இது நான் எழுதியதிலேயே மிகவும் அருமையான கோடிங்” என்று குறிப்பிட்டுள்ளார். 2000ஆம் ஆண்டு, பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து விலகினார். இப்போது, சத்யா நாதெல்லா அந்த பதவியில் உள்ளார். தற்போதைய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மதிப்பு 2.84 டிரில்லியன் டாலர் ஆகும்.
பில்கேட்ஸ் 1955 ஆம் ஆண்டு சியாட்டில் நகரில் பிறந்தவர். அவருடைய தந்தை ஒரு சிறந்த வழக்கறிஞர், தாய் ஒரு ஆசிரியர். சிறு வயதிலேயே கணினி ஆர்வத்துடன் இருந்த பில்கேட்ஸ், பிறகு உலக அளவில் அறியப்பட்ட தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கினார். தற்போது, தனது சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை உலகம் முழுவதும் நற்பணிகள் செய்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும், பருவநிலையின் மாற்றங்களை சீராக்குவதற்கும் வழங்கி வருகிறார்.