சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயிப்பது வங்கிகளின் தனிப்பட்ட முடிவு என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சில வங்கிகள் இந்தத் தொகையை அதிகரித்ததற்கு ரிசர்வ் வங்கிக்கு சம்பந்தமில்லை என்று ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறினார்.

குஜராத்தில் நடைபெற்ற நிதி சேர்க்கை விழாவில் அவர் இதை விளக்கினார்.
சில வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு ரூ. 10,000 என நிர்ணயித்துள்ளன.
மற்ற வங்கிகள் அதை ரூ. 2,000 எனவும், சிலர் விலக்குதலும் அளித்துள்ளனர்.
இது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை அதிகார வரம்பிற்குள் வராது எனவும் கூறினார்.
ஐசிஐசிஐ வங்கி ஆகஸ்ட் 1 முதல் புதிய கணக்குகளுக்கான MAB-ஐ ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளது.
மெட்ரோ நகரங்களில் ரூ. 50,000, சிறு நகரங்களில் ரூ. 25,000, கிராமப்புறங்களில் ரூ. 10,000 என உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் கல்வியறிவு முக்கியம் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் வலியுறுத்தினார்.
ஜன் தன் யோஜனா திட்டம் 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தில் KYC சரிபார்ப்பு அவசியம் எனவும் அறிவுறுத்தினார்.
குறைந்தபட்ச இருப்பு தொடர்பான தீர்மானம் முழுவதும் வங்கிகளின் பொறுப்பு என அவர் மறுபடியும் வலியுறுத்தினார்.
வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த ரிசர்வ் வங்கியின் தலையீடு நடைபெறவில்லை.
இதனால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி நேரடியாக பொறுப்பை மறுத்துவிடவில்லை.
ஆனால் அந்த பொறுப்பை வங்கிகளிடம் விட்டுவிட்டதாகவே அவரது கருத்து வெளிப்படுகிறது.
வங்கிச் சேவைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார். சமூகத்தின் கீழ்மட்ட மக்களும் பயனடைய வேண்டும் என்பதே முக்கியம் எனவும் கூறினார்.