பெங்களூரு: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, கிங்பிஷர் டவர்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.50 கோடி மதிப்பிலான சொகுசு வீட்டை வாங்கியுள்ளார். 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் 34 மாடிகள் கொண்ட மூன்று கட்டிடங்கள் உள்ளன.
இங்கு 8,000 சதுர அடியில் தொடங்கி 4 படுக்கையறைகள் வரை 81 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு சதுர அடி விலை ரூ.59,500 என குறிப்பிடப்பட்டுள்ளது. 16வது மாடியில் 8,400 சதுர அடியில் அமைந்துள்ள நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு ரூ.50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது.
நாராயண மூர்த்தி வாங்கிய இரண்டாவது சொகுசு வீடு இது. இதே வளாகத்தில் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.29 கோடிக்கு வீடு வாங்கினார். இந்த வளாகத்தில் பல முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் வசிக்கின்றனர்.