சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ரூ.152 உயர்ந்து ரூ.53,480 ஆக உள்ளது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை தினமும் நிர்ணயிக்கப்படுகிறது.
அதன்படி கடந்த சில மாதங்களாக தங்கம் விலை திடீரென ஏற்றமும், இறக்கமும் சந்தித்து வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக வரலாறு காணாத ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று (ஜூன் 29) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவானுக்கு ரூ.152 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.53,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.6,685 ஆக இருந்தது. சென்னையில் நேற்று (ஜூன் 28) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. சவரன் ரூ.53,328-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,666-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ரூ.94.50 ஆகவும், கிலோ ரூ.94,500 ஆகவும் உள்ளது.