புதுடெல்லி: தென் கொரியாவின் புகழ்பெற்ற எல்ஜி நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டிற்கு தயாராகி வருவதாக அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பங்கு வெளியீட்டின் மூலம், எல்ஜி இந்தியா சுமார் ரூ.8,300 கோடி முதல் ரூ.12,450 கோடி வரை நிதி திரட்டும் நம்பிக்கையில் உள்ளது. இதுவரை வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
எலக்ட்ரானிக்ஸ் துறையில் 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.6.30 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்ட இலக்கு வைத்துள்ளது எல்ஜி. அதன் இலக்குகளை நிறுவிய பின்னர், பங்கு வெளியீட்டு நடவடிக்கைகள் அதன் ஒரு பகுதியாக கையாளப்படும் என்று கூறப்படுகிறது. நிதி திரட்டிய பிறகு, எல்.ஜி. இந்தியப் பிரிவின் சந்தை மதிப்பு ரூ.1.09 லட்சம் கோடியைத் தொடக்கூடும் என்று கூறப்படுகிறது.
‘பேங்க் ஆஃப் அமெரிக்கா, சிடி குரூப், ஜே.பி.’ மோர்கன் மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற முன்னணி வங்கிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.